சரத் - தவமாய் தவமிருந்து
*********************
*********************
*********************
*********************
*********************
தீபாரமணி என்ற அந்த தாயின் முதல் விமானப் பயணம் மிக்க பெருமை வாய்ந்ததாக அமைந்ததன் காரணம், அவரது தனயனின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும் என்றால் அது மிகையாகாது ! இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாதில் (IIM-A) படித்துப் பட்டம் பெற்ற சரத்பாபு என்ற அவரது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அல்லவா அது ! மடிப்பாக்கத்தின் அருகில் ஒரு குப்பத்தில் , மிகச்சிறிய ஒரு கூரை வீட்டில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்க்கப்பட்ட சரத், வாழ்வில் உயரத் துடிக்கும் பல ஏழை மாணவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சரத் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில், தீபாரமணி ஒரு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், தினம் 30 ரூபாய் கூலிக்கு சமையல் புரிபவராகவும், பின்னர் SSLC முடித்து ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கிறார். சொற்ப வருமானத்தில் தனது நான்கு பிள்ளைகளை பராமரிக்க இயலாத சூழலில், வீட்டில் உணவுப் பண்டங்கள் தயாரித்தும், சரத் மூலம் அவற்றை தெருக்களில் விற்றும், அவர் வீட்டுச் செலவை ஈடு கட்ட வேண்டி இருந்தது.
சரத், கிங்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தபோது, எப்போதும் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தது, அவரது தாயாரின் கடும் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் வைத்துப் பார்க்கும்போது, அவ்வளவு ஆச்சரியமானதாகத் தோன்றவில்லை என்று கூறலாம் ! வீட்டில் மின்சாரம் இல்லை என்பதைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காமல், படிப்பை மட்டுமே தன் மூச்சாக எண்ணிய சரத்திற்கு ஊக்கமளித்த அவரது ஆசிரியர்கள், அவரது படிப்புக்கான செலவையும் ஏற்றனர்.
பின்னர் சரத், BITS, பிலானியில் பொறியியற் படிப்பு படித்தபோது, அணிவதற்கு நல்ல உடைகள் கூட அவரிடம் கிடையாது; அதை அவர் பொருட்படுத்தியதும் இல்லை ! அரசாங்க உதவி மற்றும் கடன் பெற்று பொறியியற் படிப்பை முடித்த சரத், Polaris நிறுவனத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார். தனது கடன்களை அடைத்த பின்னர், CAT என்றழைக்கப்படும் IIM நுழைவுத் தேர்வுக்கு (இத்தேர்வு எவ்வளவு கடினமானது என்பது பெரும்பாலோர் அறிந்தது தான்!) தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைத்தார். முதல் முறை மிக நன்றாக எழுதியும், தேர்வுக்கான கேள்விகள், தேர்வுக்கு முன்னரே வெளியான குளறுபடியால், சரத் தேர்ச்சி அடைய முடியாமல் போனது. மனம் தளராமல், இரண்டாம் முறை தேர்வெழுதி அபார மதிப்பெண்கள் பெற்றதால், இந்தியாவில் உள்ள ஆறு இந்திய மேலாண்மைக் கழகங்களிலிருந்தும் அவருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது !!!
மறுபடியும், படிப்புக்காக, கல்வி மானியத்திற்கு மேல் கடனும் வாங்க வேண்டியிருந்தது. இன்று, அகமதாபாதில் சரத் தொடங்கியுள்ள Food King Catering Services என்ற சிறிய நிறுவனத்தின் தொடக்க விழாவில், IIM-A யின் சேர்மனும், INFOSYS நிறுவனத்தின் தலைவருமான திரு.நாராயணமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் ! சரத் வாழ்வில் மென்மேலும் உயர நமது வாழ்த்துக்களைக் கூறுவோம்.
"என்ன தவம் செய்தீர்கள் அம்மா, இத்தகைய தவப்புதல்வனை ஈன்றெடுக்க!" என்று தான் அந்த உன்னதப் பெண்மணியை கேட்கத் தோன்றுகிறது !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
*********************
நன்றி: இந்து நாளேடு
20 மறுமொழிகள்:
சிறப்பான பதிவு
ஆரோக்கியம்
http://ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it.
ஆரோக்கியம்,
கருத்துக்கு நன்றி !
Great to hear like this...
பாலா,
சரத்தை பற்றிய தகவல்களை அறிய ஆவல் கொண்டிருந்தேன்! உங்கள் பதிவு கண்டது மகிழ்ச்சி!
பதிவுக்கு நன்றி...
இளவஞ்சி, Vellanguli Manikandan,
கருத்துக்கு நன்றி !
சரத்தின் அயராத உழைப்பிற்க்கும், அவரது தாயார் தீபாரமணியின், தியாகங்களுக்கும், சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.
நல்லொழுக்கம், நல்ல எண்ணம் ஒருவரை எவ்வளவு உயர்த்தும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஸ்ரீதர்
nanmanam ஸ்ரீதர்
கருத்துக்கு என் நன்றி !
It is worthwhile to note that Sarath decided to become an entrepreneur though he had a good offer from a reputed company after his MBA degree !
நண்பர் வழியாக ஹிந்துவில் படித்தவுடன், மேலும் அறிய ஆவலாய் இருந்தேன். விரிவான பதிவுக்கு நன்றி.
Boston Sir,
கருத்துக்கு என் நன்றி !
சிறப்பான பதிவு.
சரத் மிக்க பாராட்டுக்குரியவர் தான்.
Really great!
Manohar, Kannan, Camelpost and Manonmani,
Thanks for your comments.
enRenRum anbudan
BALA
Dear Bala,
Well written. One comment...Sarath's mother's salary was 30 rupees per month not per day.
!!!!!!! வாழ்த்துக்கள்!!!!!!!
சாதனை புரிந்த சரத்திற்கும்,
பதிவிட்ட பாலாவிற்கும்.
அன்புடன்,
துபாய் ராஜா.
இதுபோன்ற உழைப்பால் முன்னேறியவர்களைப் பற்றிய செய்திகளை படிக்க நமக்குள் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றி, பாலா.
அனானி, துபாய் ராஜா,
நன்றி.
காசி,
நன்றி. ரொம்ப நாளாச்சு பேசி ! எப்படி இருக்கீங்க ? நலம் தானே.
என்றென்றும் அன்புடன்
பாலா
நிசம்தாங்க...
சும்மா சுத்தி இருக்கிற எல்லாத்தையும் குறை சொல்லாம இருக்கும் வசதிக்குள்ளூம் கஷ்டப்பட்டு உழைத்துப் படித்து முன்னேறி... இளம் தலைமுறைக்கு ஒரு பாடம்தான்.
என்றைக்கும் உழைப்பும் படிப்பும் கைவிடாது...
More precisely does not happen levitra In it something is. I thank for the information, now I will not commit such error.
Post a Comment